Nakkheeran
“இது ஆணவத்தின் உச்சம்; அழிவு நிச்சயம்” - கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இன்று (16.11.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று (15.11.2026) நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில், வழக்கமாகத் தமிழ் கடவுளான முருகப் பெருமானை போற்றும் வகையில், ‘அரோகரா... கந்தனுக்கு அரோகரா’ என்ற முழக்கங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு எழுப்பப்படும். முருகப் பெருமானிடம் சரணடைவதையும், அவரைப் போற்றுவதையும் குறிக்கும் வகையில்தான் இந்த முழக்கம் எழுப்பப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு ‘முதலமைச்சரு…