Samayam Tamil
வெற்றிப் பயணத் திட்டத்தால் ஒவ்வொரு நாளும் ரூ.25 கோடி வருவாய் இழப்பு: அரசு நிதி வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி
தமிழகத்தில் இந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் அன்று வெற்றிப் பயணத் திட்டம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தால் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்குக் கூட நிதியில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திணறி வருகின்றன. எனவே வெற்றிப் பயண நிதியை உடனே வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.