Maalaimalar
'பேய்களைப் பார்ப்பதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும்'- டாடா குழும விவகாரத்தில் நிர்மலா பதிலடி
எதிலுமே தேவையற்ற அரசியல் உள்நோக்கத்துடன் கற்பனை செய்து கொண்டு பேய்களைப் பார்ப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் பெருமைமிகு வணிகக் குழுமமான 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகக் குழு மற்றும் அதன் தலைவர் என்.சந்திரசேகரன் மறுநியமன விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்களும் பெருநிறுவனத்…