Indian Express Tamil
அறப்போர் புகார் எதிரொலி: ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் மாற்றம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில், தற்போது பதிவாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளில் நடைபெற்ற இணைவு ஆய்வுகளில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள பல கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்ததாகப் ப…