Indian Express Tamil
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த தமிழக அரசு: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிப்பு
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல இருக்கிறார்கள். பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முந்தைய நாளான, சனிக்கிழமை சேர்த்து, வழக்கமான வார இறுதி விடுமுறை போல முடிந்துவிடும். மேலும், இந்த ஆண்டு தீபாவளி அன்று அமாவாசை வருவதால், பலர் அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, மறுநாள் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தீபாவளி அன்றே இரவு பணியிடங்களுக்குத் திரும்புவதும் ச…