உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ.23,165 கோடியில் 120 கி.மீ மேம்பாலம்: பெங்களூரு டிராஃபிக் பிரச்சனையை முடிக்க கர்நாடகா அரசு பிரம்மாண்ட பிளான்

பெங்களூரு நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ரூ.23,165 கோடி மதிப்பீட்டில் 120 கி.மீட்டர் நீளமுள்ள மேம்பாலங்கள் (Elevated Corridors) அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசு பெங்களூரின் உள்கட்டமைப்பை விரைவுபடுத்தி வருகிறது. தனது அதிகாரப்பூர்வ இல்லமான 'கிருஷ்ணா'வில் பெங்களூருவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை அறிவித்தார். வரும் 2037-ஆம் ஆண்டில் பெங்களூரு நகரம் தனது 500-வது ஆண்டை எட்டவுள்ள நி…