Indian Express Tamil
ஓ.எம்.ஆர் - இ.சி.ஆர். புதிய இணைப்பு சாலை: ஐ.டி ஊழியர்களின் பயண நேரம் வெறும் 10 நிமிடமாகக் குறையும்
சென்னையின் முக்கியப் பகுதிகளான ஓ.எம்.ஆர்.மற்றும் இ.சி.ஆர். ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலை திட்டத்திற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. சோழிங்கநல்லூரில் தொடங்கி கோவளம் வரை அமைக்கப்பட உள்ள இந்த புதிய சாலை, இப்பகுதி ஐடி துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தனியார் ஆலோசகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் 3 மாதங்களுக்குள் ஆய்வை முடிக்க வேண்டும். நில அளவீட்டுப் பணிகள், போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை, நிலம…