Maalaimalar
மத்திய கிழக்கு மோதல்களில் இதுவரை 22 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலில், 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்த இந்தியாவின் ஆழ்ந்த கவலையை மீண்டும் வலியுறுத்தியதோடு, உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் விவரித்தார்…