Dinamani
கோவையில் 2-வது நாளாகப் பனிமூட்டம்! மக்கள் அவதி!
கோவை மாநகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று அதிகாலை பரவலாகப் பனிமூட்டம் காணப்பட்டது. கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. அதேசமயம், வானிலை குளிர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவை மாநகரின் உக்கடம், சுங்கம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பேரூர்…