Indian Express Tamil
திருமண விழா ஏற்பாடுகளில் இருந்த நேரு குடும்பம்; குறி வைத்து அடித்த விஜிலன்ஸ்: திரண்டு வந்த திருச்சி தி.மு.க
திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 3 பொலிரோ வாகனங்களில் வருகை தந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர சோதனையைத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு கருதி வீட்டின் நுழைவு வாயிலில் கூடுதல் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு…