Polimer News
மனைவிக்குத் தெரியாமல் பெண் குழந்தையை விற்ற கணவர்..
கோவையைச் சேர்ந்த மீனா என்பவருக்குத் தெரியாமல் அவருடைய பெண் குழந்தையை கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வழக்கில் கணவர், அவரது நண்பர், தரகர், செவிலியர், குழந்தையை வாங்கிய தம்பதி என 6 பேருக்கும் கோவை நீதிமன்றம் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. குழந்தையை விற்ற கணவர், குழந்தையைக் காணவில்லை என நாடகம் ஆடிய நிலையில், மனைவி கொடுத்த புகாரில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டது.