Nakkheeran
”ரயில்களில் போன்களுக்கு சார்ஜ் போட முடியாதா?”; நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, தென்கிழக்கு ரயில்வேயில் இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை - ஹவுரா மெயில் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் சக்ரதர்பூர் கோட்டம் பண்டமுண்டாவில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக பி-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர், அதிகாலை சுமார் 3.30 மணியளவில், தனது பவர் பேங்க்கை சார்ஜிங் பாயிண்ட்டில் இணைத்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது, அந்த பவர் பேங்க் வெடித்ததில் அங்குத் தீப்பற்றியதுடன், பெட்டி முழுவதும் புகை பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனினும், இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம…