உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஞ்சய் மாத்தூர், சோனல் சந்திரா இட மாற்றம்: கரூர், தென்காசிக்கு புதிய எஸ்.பி-க்கள்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டும், பணியிடை மாற்றம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சய் மாத்தூர் மற்றும் சோனல் சந்திராவை இட மாற்றம் செய்தும், கரூர், தென்காசிக்கு புதிய எஸ்.பி-க்களை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளள்து. இதன்படி, தமிழக உள் துறை முதன்மைச் செயலாளர் அ. கார்த்திக் பிறப்பித்துள்ள உத்தரவில், "டி.ஜி.பி சஞ்சய…