Indian Express Tamil
நம்ம சூரிய குடும்பத்துல புதுசா ஒரு கிரகமா? விஞ்ஞானிகளையே ஷாக் ஆக்கிய கண்டுபிடிப்பு
நம் சூரிய குடும்பத்தில் ப்ளூட்டோவை விட அப்பால் ஒரு பிரம்மாண்டமான புதிய விண்வெளிப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நமது சூரிய குடும்பத்தில் புதியதொரு 'குள்ள கிரகம்' (Dwarf Planet) சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், விஞ்ஞானிகள் இது குறித்து இன்னும் முழுமையான உறுதிப்படுத்தலை வழங்கவில்லை. சர்வதேச வானியல் ஒன்றியத்தின் (IAU) சிறு கோள் மையம் (Minor Planet Center) இந்த முக்கிய கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ED138 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், நெப்டியூன் மற்றும் ப்ளூட்டோவுக்கு அப்பாற்பட்ட தொலைவில் உள்ளது. இதன் விட்டம் சுமார் 600 முதல் 1,500 கிலோமீட்டர் வ…