Nakkheeran
"ரசாயனத்தைத் தவிர்ப்போம், உயிரைக் காப்போம்" – உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்!
வீரப்பன்பாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு: பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை நிறுவனம் சார்ந்த நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வீரப்பன்பாளையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம், விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, அவற்றிற்கு மாற்றாக உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இக்கூட்டத்தில் மாணவர்கள் டிரைக்கோடெர்மா விரிடி மற்று…