Nakkheeran
கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி இளைஞர் : ஒரே நாளில் நிறைவேற்றிய முதல்வர் விஜய்!
சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் நேற்றைய தினம் (28.10.2026) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அதில், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். அதோடு, அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவ…