2028ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணம் மகாமகம் திருவிழா..
கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழா 2028ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கிய நிலையில், மகாமக குளம், குடந்தை அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், அமைச்சர்கள் அருண்ராஜ், வினோத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், கும்பகோணம் மகாமக திருவிழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாகத் தெரிவித்தார்.