Vikatan
முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்: 'தனி விமானம், ரோடு ஷோ, திறப்பு விழா...' - விழா ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தருவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி சரக ஐ.ஜி. நேரில் ஆய்வு: முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று…