உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வாரணாசியில் பா.ஜ.க தோல்வி: மோடி கோட்டையில் ஓட்டை; உ.பி தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க-வுக்கு உணர்த்தும் செய்தி என்ன?

லால்மணி வர்மா, மால்ஸ்ரீ சேத் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில சட்ட மேலவைக்கான 11 இடங்களுக்கு (ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகள்) தேர்தல் நடைபெற்றது. இதில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், முதன்மை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP) 5 இடங்களைக் கைப்பற்றி வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த முறை இந்த 11 இடங்களில் 2 இடங்களை மட்டுமே வென்றிருந்த சமாஜ்வாதி கட்சிக்கு, சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் கிடைத்துள்ள இந்த வெற்றி மிகப்பெரிய முன்னேற்றமாகும். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வா…