உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நிறம் மாறும் சினிமா - 15 | மணிரத்னத்தின் பிளாஸ்டிக் சினிமாக்களும், இந்து தேசியமும்!

கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பார்த்திபன் கனவு’. நாயகன் ஸ்ரீகாந்த் சாலையில் பார்க்கும் நாயகி சினேகாவின் மீது காதல்வயப்படுவார். எதேச்சையாக அவர் வீட்டில் பார்க்கும் பெண்ணும் சினேகாவேதான் என்பதை அறிந்து ஆனந்தம் கொள்வார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான், தனது மனைவி, தான் காதலித்த அதே பெண் அல்ல, அந்தத் தோற்றத்தில் உள்ள இன்னொரு பெண் என்பது தெரியவரும். திருமணத்துக்கு முன்பு சினேகாவின் தனிப்பட்ட ரசனைகளைத் தெரிந்துகொள்வதற்காக…