Polimer News
தமிழகத்தில் மழையும் அதிகரிக்கும் வெப்பநிலையும்.. வானிலை அப்டேட்!
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி மழைக்கு வாய்ப்பு: வரும் நவம்பர் 1-ம் தேதி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுரை, திருச்ச…