உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஐ.பி.எல்-லில் அடுத்த ட்விஸ்ட்... மீண்டும் மும்பை அணியின் கேப்டன் ஆகும் ரோகித்; ஹார்திக் பாண்டியா நிலைமை என்ன?

வரவிருக்கும் 2027 ஐ.பி.எல் சீசனுக்காக, மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி, தனது பயிற்சியாளர்கள் குழுவை (support staff) முழுமையாக மாற்றியமைத்துள்ள நிலையில், இந்த முடிவு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஐ.பி.எல் சீசனின் பாதியில், அணி தடுமாற்றத்தைச் சந்தித்தபோதே, ஹர்திக் பாண்டியாவிடமிருந்து கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க மும்பை இந்தியன்ஸ் விரும்பியதாகத் தெரிகிறது. ஏற்கனவே நமது நாளிதழில் குறிப்பிட்டது போல, ஹர்திக் பாண்…