உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மோசமான வானிலை எச்சரிக்கை: உத்தரகாண்டில் பத்ரிநாத் பக்தர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து

எழுதியவர்: விதேஷா குண்டமல்லா பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாகப் பைலட் உட்பட 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளன. ஆங்கிலத்தில் படிக்க: அக்டோபர் 30-ம் தேதி சமோலி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில், ஒருசில பகுதிகளில் இடி, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சமோலி மாவட்டம் முழுவதிலும் லேசானது முதல் மிதமான மழையும…