Samayam Tamil
தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமராவார் - மதுரையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஜனநாயக நாட்டில் ஒரு தமிழர் பிரதமராவதற்கு எப்போதும் வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் பெரும் விவதமாக மாறியுள்ளது. விஜய் அடுத்த பிரதமர் வேட்பாளர் என சட்டப்பேரவையிலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய போது தமிழக காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் பிறகு முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தி சென்னையில் சந்தித்த போது சமாதானம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.