Indian Express Tamil
பயணிகள் கவனத்திற்கு: மதுரை, திருமங்கலம் வழித் தடத்தில் ரயில் சேவைகள் மாற்றம்: டிக்கெட் புக் பண்ணும் முன் இதைப் படிங்க
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு, தென் மாவட்டங்கள் வழியாக இயங்கும் பல முக்கிய ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிடும் முன் மாற்றங்களை தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் குருவாயூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128): நவம்பர் 1, 3, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் டிசம்பர் 1, 3, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில், விருதுநகர், மணமதுரை, காரைக்குடி மற்றும் தி…