Polimer News
சிறுவன் முத்துவேல் மரணம் - பெற்றோருக்கு உணர்த்தும் பாடம் என்ன?
மதுரை மேலூர் அருகே பாழடைந்த வீட்டில் இருந்து சிறுவன் முத்துவேலுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், சக சிறுவன் கயிற்றால் கழுத்தை இறுக்கி விளையாடிய போது உயிரிழந்ததாக போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனியாமங்கலத்தைச் சேர்ந்த சிறுவன் முத்துவேல் நேற்று முன் தினம் விளையாடுவதற்காக சென்ற நிலையில் மாயமானார். 5 தனிப்படை அமைத்துத் தேடிய போது அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அதே பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவனுடன் முத்துவேல் விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்தை கயிற்றால் இறுக்கி விபரீதமாக விள…