உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“தி.மு.க.வின் சாதனைகள், பெருமைகள் இப்போது விளங்குகின்றன” - கி. வீரமணி கருத்து!

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைந்த ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை கலைப்பதா?. இந்த ஆணையம் கலைக்கப்பட்டதை உடனடியாக, பா.ஜ.க. வரவேற்றுள்ளதே. த.வெ.க. அரசு யாருக்குச் சார்பானது என்பது தெள்ளத் தெளிவாகிறதே என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில உறவுகள் பற்றி அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கென ‘திராவிட மாடல்’ அரசின் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், உச்சநீதிமன்ற (ஓய்வு) நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்ற…