உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின் சீமானை ஆதரிப்பது பற்றி கூறுகிறோம் - மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு சீமானை ஆதரிப்பது பற்றி தெரிவிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த சீமானுக்கு தி.மு.க. ஆதரவளிக்குமா? என பசும்பொன்னில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும், ஹீரோவாக விஜய் செயல்படுவார் என வாக்களித்த மக்கள் ஏமாந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்ததுடன், சட்டம் ஒழுங்கும் சந்தி சிரிப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.