Samayam Tamil
Pressure Cooker Whistle Cleaning: பிரஷர் குக்கர் விசிலில் உள்ளே இருக்கும் உணவு துகள்கள், அழுக்கை நீக்க 4 எளிய வழிகள்!
கிச்சனில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கியமான சமையல் சாதனங்களில் பிரஷர் குக்கரும் ஒன்று. சாதம், குழம்பு, பருப்பு உள்ளிட்ட பல்வேறு உணவுகளை விரைவாகச் சமைக்க இது பெரிதும் உதவுகிறது. அதனால், பிரஷர் குக்கரைச் சுத்தமாகவும் முறையாகவும் பராமரிப்பது அவசியமாகும். குக்கரின் உட்புறம் மற்றும் மூடியைச் சுத்தம் செய்யும் பலரும், அதன் விசிலை சுத்தம் செய்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. தொடர்ந்து பயன்படுத்தும்போது விசிலின் துளைகளில் உணவுத் துகள்கள், எண்ணெய் பிசுக்கு படிந்து அழுக்கு சேரலாம். இதனால் நீராவி வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, ஆபத்துகள் நேர வாய்ப்புள்ளது. விசிலின் வெளிப்புறத்தை மட்டும் கழுவுவதால்…