IBC Tamil
யாழ்.ஊர்காவற்துறையில் காலாவதி பொருட்கள் விற்பனை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நான்கு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தண்டப்பணமும் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்தமை, நலத்துக்கொவ்வாத வகையில் களஞ்சியப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த வியாபார நிலையங்களுக்கு வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (12.11.2026) விசாரண...