Nakkheeran
’இனி ஆபீஸ் போக தேவையில்லை’; பூங்காவிலிருந்தே வேலை பார்க்கலாம்!
தகவல் தொழில்நுட்ப (ஐ.டி)நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் பூங்காக்களில் அமர்ந்து பணி செய்யும் விதமாக ”வொர்க் ஃப்ரம் பார்க்” என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ஐ.டி ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், சைபராபாத் நகரம் தேசிய மற்றும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக விளங்கி வருகிறது. இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிகிற ஊழியர்கள், தொழிலதிபர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் அமைதியாக அமர்ந்து பணிபுரிவதற்கான சூழலை வழங்குவதற்காக மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ஊழியர்கள் பூங்காவில் (பார்க்) அமர்ந்தபடி பணி செய்…