Indian Express Tamil
குழந்தைகள் தினம் 2026: நவம்பர் 20-ல் கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினம் எப்படி நவம்பர் 14-க்கு மாறியது? பலரும் அறியாத வரலாறு
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்டிருந்த நேரு, அவர்களின் கல்வி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். குழந்தைகள்தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி என்று நம்பிய அவர், அவர்களுடன் நேரம் செலவிடுவதிலும் உரையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே குழந்தைகள் அவரை அன்புடன் 'சாச்சா நேரு' என்று அழைத்தனர். 188…