Polimer News
குழந்தைகள் தினம் - மாணாக்கருக்கு கேக் வழங்கினார் முதலமைச்சர் விஜய்..
சென்னை கொளத்தூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய முதலமைச்சர் விஜய், மாணாக்கருக்கு கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பட்டு வேட்டி சட்டையில் வந்த முதலமைச்சர் விஜயை பார்த்து குழந்தைகள் வணக்கம் வைத்ததால் பதிலுக்கு அவரும் வணங்கினார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர் லால் நேரு வேடம் அணிந்த மாணவி, முதலமைச்சர் விஜயை வரவேற்று முதல் கேக்கைப் பெற்றுக் கொண்டார். இதை அடுத்து ஒவ்வொரு வகுப்பாக சென்று தனது கைகளாலேயே முதலமைச்சர் விஜய் அனைத்து மாணவர்களுக்கும் கேக்குகளை வழங்கினார். மழலையர் வகுப்பிற்கு சென்ற முதலமைச்சர் விஜய், குழந்தையை தூக்கி கேக் ஊட்டினார். அப்போது கேக் நன்றாக இருக்க…