Nakkheeran
ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் பிடித்த ராவணன்; 1000 கோடி வசூலித்த ‘ராமாயணா’
பாலிவுட்டில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான ‘ராமாயணா’ படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியானது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரித்திருக்க நிதேஷ் திவாரி இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்திருந்தார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஒரு தரப்பினர் விஎஃபெக்ஸ் காட்சிகளையும் யஷ்ஷின் நடிப்பையும் பாராட்டியிருந்தனர். இன்னொரு தரப்பினர் ராமர் கதாபாத்திரம் போதுமான அளவு வடிவமைக்கப்படவில்லை என்றும் கதைக்கருவில் முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறவில்லை எனவும் கூறியிருந்தனர்…