Polimer News
சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த 1,823 மாடுகள் பிடிக்கப்பட்டுப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி
சென்னையில் 15 மண்டலங்களிலும் தலா ஒரு வாகனம் மற்றும் 5 பணியாளர்கள் மூலம், 2026 ஜனவரி 1 முதல் நவம்பர் 11 வரை சாலையில் திரிந்த 1,823 மாடுகள் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை தொழுவத்தில் அடைக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களிடம் 52 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, மீண்டும் சாலையில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் மாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.