IBC Tamil
1.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் படகில் மீட்பு!
புதிய இணைப்பு தெற்கு ஆழ்கடலில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட மீன்பிடிப் படகில், ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (13) குறித்த படகு காலி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அதனை நேரில் பார்வையிட்ட போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தெற்குப் ப...