Polimer News
நவம்பர் 15-ல் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்? வானிலை மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 14) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 15ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட கடல் பகுதிகளில் நிலவும் வானிலைச் சூழலைக் கருத்தில…