Indian Express Tamil
பார்க்க அழகாக தான் இருக்கும்; ஆனா ஆபத்து கொட்டி கிடக்கு: டார்க் மேஜிக் செய்யும் குடை காளான்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்பு நிலங்களில், பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் சிறிய பழுப்பு நிற காளான் ஒன்று, இயற்கையின் இரண்டு கொடிய நச்சுகளை தன்னுள்ளே கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடை வடிவத்தைக் கொண்ட இந்த காளானுக்கு 'கேலரினா இண்டிகா' (Galerina indica) எனப் பெயரிடப்பட்டுள்ளது. புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கு "டார்க் மேஜிக் காளான்" எனப் பெயரிட்டுள்ளனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'கரண்ட் பயாலஜி' என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 13: இன்று இரவு உலகம் அழியுமா? 60 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த விஞ்ஞானிகள் ஒரே காளானில் இரட்டை ஆபத்து பொதுவாக தன…