Indian Express Tamil
திருமங்கலம் மெட்ரோ நிலையம் அருகே ரூ.446.88 கோடியில் 4 கட்டடங்கள்; 24 மாதங்களில் கட்டி முடிக்கத் திட்டம்
எழுதியவர்: அனிஷ் மொண்டல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி ரூ.446.88 கோடி செலவில் நான்கு கட்டடங்களைக் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், மெட்ரோ ரயில் செல்லும் மேம்பாலப் பாதை கட்டடங்களுக்கு இடையே செல்லும் வகையில் ஒருங்கிணைந்த வடிவமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. பணிகள் தொடங்கியதிலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டுமானத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை கேபாசைட் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் லிமிடெட் (Capacite Infraprojects Limited) நிறுவனத்த…