Indian Express Tamil
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நவ. 16-ல் 'அக்வான்' புயலாக மாறும்; இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (நவம்பர் 13) காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், நவ. 16-ல் அக்வான் புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெற வாய்ப்பு: வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை (நவம்பர் 14) சனிக்கிழமையன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 15-ஆம் த…