Polimer News
ராஜபாளையம் அருகே 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் சாய்த்த ஒற்றைக் காட்டு யானை..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள தனியார் தோப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த 300 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் சாய்த்தது. தற்போது வரை 30 லட்சம் ரூபாய்க்கு மேல் காட்டு யானையால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வனவிலங்குகள் விவசாய பகுதிக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.