News about ADMK Party

Tamil news from around the world!

தமிழகம் பயங்கரவாதிகளின் முகாமாக மாறி வருகிறது என குற்றச்சாட்டியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
சென்னை: அதிமுக, பாஜ தலைவர்களிடையே `வார்த்தை போர்’ நடந்து வந்த நிலையில், நேற்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். தமிழகம் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமாக மாறி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் கோவையில் பேட்டி அளித்தபோது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், `மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’’ என்று கூறினார். இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வந்தார். அங்கு முதல்வரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து பேசினோம். தற்போது மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளதாக கேட்கிறீர்கள். யார் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.எப்போதும் ஒரு விஷயம் நடக்கும் போது இரண்டு அரசுகளும் ஒரே சிந்தனை, ஒரே செயல்பாடுகளுடன் செயல்படும் போது அதன் பலன் தமிழகத்துக்கு அதிகமாக கிடைக்கும். நான் கூறுவது வடிகட்டிய பொய் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். நான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி கூறவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் பயங்கரவாத செயல்பாடுகள் பற்றி தான் பேசினேன். அது நடக்கவில்லை என்று சொன்னால், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.வடிகட்டிய பொய் என்று நேரடியாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளாரே என்கிறீர்கள். ஓபிஎஸ் பெரிய ஜமுக்காளத்தை வைத்து கொண்டு சொல்கிறார். பாஜகவில் கட்சி பிரச்னை பற்றி மோடியிடம் நாங்கள் கூறுவோம். அவர் கட்சி விவரங்களை அமித்ஷாவிடம் பேசும்படி கூறுவார். அப்படி இருக்கும் போது இன்னொரு கட்சி பிரச்ைனையில் மோடி தலையிட தேவை என்ன இருக்கிறது. அதிமுக என்பது தனி கட்சி. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். தமிழக முதல்வர் தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொள்வது குறித்து தமிழக பாஜ தலைமை தான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கிறோம்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பு இருந்தே தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் மறைமுகமாக இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அவர்கள் தங்களை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ளாமல்  போராட்டத்தின் பின்னணியில் புகுந்து செயல்பட்டனர். அதன் பின்பு கேரளம், கர்நாடகம் உள்பட பல மாநிலங்களில் பல இடங்களில் தீவிர வாதிகளின் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தாக்குலில் இன்னும் ஈடுபடவில்லை என்பதற்காக இங்கு தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை என்று கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் பல இடங்களில் அவர்கள் பயிற்சி மையங்களை வைத்துள்ளனர். பயிற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், அந்த பயங்கரவாதிகள் தற்போது அவர்களது செயல்பாட்டின் தன்மைகளை மாற்றி இருக்கின்றனர். இதை கண்டு மாநில அரசு ஏமாந்து போய் விடக்கூடாது.  மத்திய அரசு, தமிழகத்தில் நடக்கும் இந்த செயல்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Feb 20, 2018
கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Dinakaran , Feb 20, 2018
ஓ பன்னீர் செல்வம் பேச்சுக்கு கருத்து கூற முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்
Dinakaran , Feb 17, 2018
வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. பரபர பின்னணி
ThatsTamil , Feb 15, 2018
7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் சிறிது நேரத்தில் திறப்பு
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத் திறப்பையொட்டி சட்டமன்ற வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக எம்.பிக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர் .பார்வையாளர் மாடத்திலும் சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரவையில் ஜெயலலிதா பட திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏக்கள் இருக்கை அதிமுக எம்பிக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் திமுக எம்எல்ஏக்கள் அமரும் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dinakaran , Feb 11, 2018
அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
Dinakaran , Feb 3, 2018