News about Kanchipuram

Tamil news from around the world!

இரும்பு தொழிற்சாலையில் பைப் வெடித்து 2 பேர் சாவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த அமராவதிபட்டினம் பகுதியில் தனியார் இரும்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு, கடந்த 16ம் தேதி  இரும்பு உருக்கப்பட்டு செல்லும் பைப் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் அருகில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூ (28) மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பப்பூ (29) ஆகிய  இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது.  இதையடுத்து, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார், வழக்கு பதிந்து  விசாரிக்கின்றனர்.  
Dinakaran , Aug 20, 2018
தண்டவாளத்தில் விரிசல்.. தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி
ThatsTamil , Aug 5, 2018
சிலை திருட்டு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு விஜயகாந்த் கண்டனம்
சென்னை: சிலை திருட்டு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை செய்ததில் 100 கிலோ தங்கம் திருட்டு என்று தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிலை திருட்டில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வழக்கை திடீரென சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்த விஜயகாந்த், சிலை திருட்டு வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சிலை திருடியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Dinakaran , Aug 2, 2018
தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு
சென்னை : தமிழகத்தில் கடுமையான வெப்பம், அனல் காற்றாற்றை அளித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் பாதிப்பு தொடர்ந்த நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரிவெயிலின் தாக்கம் தொடங்கியது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சில பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அக்னி நட்சத்திர காலத்தில் கத்தரிவெயிலின் தாக்கம் சென்னை, வேலூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இதுகுறித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், அக்னி நட்சத்திரம் முடிந்தபின் அதிகபட்ச வெயில் இருக்காது என்று கூறியுள்ளனர். மேலும் தெற்கு அந்தமானில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழையானது தமிழகத்தை நெருங்கி வரும் சமயத்தில் ஈரப்பதமான காற்று வீசக்கூடும் என்றும் அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கும் குறையும் என்றும் தெரிவித்துள்ளார். அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுவதால் படிப்படியாக கோடை வெயிலின் உக்கிரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dinakaran , May 28, 2018
மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை கைது செய்தது போலீஸ்
Dinakaran , May 25, 2018
ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் புகார்
Dinakaran , May 11, 2018
ரவுடியால் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி
Dinakaran , May 4, 2018
பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரம் : தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : செங்கல்பட்டு பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து வருவாய் துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட 294 முதியவர்களின் தற்போதைய நிலை என்ன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து  அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரை ஆஜர்ப்படுத்தக் கோரி செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாகி தாமஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது உயர்நீதிமன்றம்,  தாமஸின் மனு குறித்து தமிழக டிஜிபி, காஞ்சிபுரம் எஸ்பி, சாலவாக்கம் ஆய்வாளர் பதில்தர உத்தரவு பிறப்பித்தது. மேலும் கருணை இல்லத்தில் இருந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுமையாக தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.
Dinakaran , Mar 22, 2018
பல்வேறு திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Dinakaran , Mar 14, 2018
பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்
Dinakaran , Mar 8, 2018